உணவு மருத்துவம்

குறைந்தபட்சமாக குறைக்கவும்

இவற்றை முற்றிலும் தவிர்க்கவும்



தினசரி வாழ்க்கையில் இதைச் சேர்க்கவும்

இவற்றைச் சாப்பிடத் தொடங்குங்கள்




காய்களை வேகவைக்கும் முறை

பழங்களின் முக்கியத்துவம். இப்போதே கேளுங்கள்.

உத்தேசமான  தினசரி  வாழ்க்கை நடைமுறை

காலை 5 - 6 அல்லது 6-7 

துயில் எழுதல். எண்ணெய் கொப்பளித்தல்கொப்பளித்தல், பல் பொடி கொண்டு பல் துலக்குதல், மிதமான வென்னீர் அருந்துதல் (சுமார் 500 - 750 மி.லி.), எனிமா எடுத்தல்

அடுத்த 30 - 60 நிமிடங்கள்

நடை பயிற்சி, முடிந்தால் செருப்பில்லாமல் மண் மீது நடந்தல், நன்றாக மூச்சு இழுத்து கை வீசி முக மலர்ச்சியுடன் உடல் சுகமாக நடக்கவும்

அடுத்த 30 - 90 நிமிடங்கள்

சுக்கு மல்லி காபி அல்லது எலுமிச்சை + தேன் + வென்னீர் குடித்துவிட்டு  சிறிது வெய்யில் காயலாம். தேவைப்பட்டால் தலைக்கு ஈரத்துணி வைத்துக்கொள்ளலாம். வியர்வை வரும்வரை / உடல் சுகமாக இருக்கும் வரை வெய்யில் காயலாம்.

பின்பு தண்ணீர் குளியல். சோப்பு இல்லாமல் குளிக்கவும். 

15 - 30 நிமிடங்கள் கழித்து ( 9-11 )

நிறைய பழங்கள், வேகவைத்த காய்கள், சிறிதளவு குழைய வேகவைத்த சாதம் + நாட்டுத் தக்காளி ரசம் பருப்பில்லாமல் உண்ணவும்

சுமார் 1 மணிக்கு 

பழச்சாறு அல்லது சுக்கு மல்லி காபி அல்லது காய் சூப் குடிக்கலாம்

3:30 மணி

பழச்சாறு அல்லது நீர் அருந்திவிட்டு சுமார் 4 மணிக்கு எனிமா எடுக்கவும். பின்பு காலையில் செய்தது போல் வெய்யில் காய்ந்து குளிக்கவும்.

5:30 மணி மாலை 

நிறைய பழங்கள், வேகவைத்த காய்கள் சப்பிடவும். தேவைப்பட்டால் சிறிதளவு குழைய வேகவைத்த சாதம் + நாட்டுத் தக்காளி ரசம் பருப்பில்லாமல் உண்ணவும்.

9 மணி

காற்றோட்டம் நிறைந்த அறையில் கொசு வலையுள் பாய் விரித்து உடல் தளர்த்தி உறங்கவும்.

நமது மருத்தவமனையில் நடைமுறையை விளக்கும் காணொளி

YouTubeYouTubeFacebookInstagramYouTubeYouTube